இந்தியன் பிரிமியர் லீக்கில் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வென்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் ஜோஸ் பட்லரை அவுட் செய்த விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
43 பந்துகளில் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உடன் 69 ரன்கள் எடுத்து விளையாடி கொண்டு இருந்த பட்லரை அஸ்வின் நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் மன்கட் முறையில் அவுட் செய்தார். இந்த ரன் அவுட்டால் ஆட்டத்தின் முடிவிலும் மாற்றம் ஏற்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் நான் பார்த்ததை என்னால் நம்ப முடியவில்லை. தவறான முன்னுதுதாரணத்தை அஸ்வின் காட்டிவிட்டார். இதை நினைத்து பின் அஸ்வின் வருந்துவார் என கூறியுள்ளார். விதிமுறைகளின் படிதான் அவுட் செய்து உள்ளேன் என அஸ்வின் விளக்கம் அளித்து உள்ளது குறிப்பிடதக்கது.