திரு க.அன்பழகன் அவர்கள் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நெடுங்கால நண்பர் ஆவார். இவர் திமுக கட்சியின் நீண்டகால பொதுச்செயலாளர் ஆவார்.
தற்பொழுது சில மாதங்களாக உடல்நிலை குறைவால் உள்ள க.அன்பழகன் தன்னுடைய வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார். தனது 97வது பிறந்த நாளை கொண்டாடுவதைத் தவிர்க்க வேண்டுமென க.அன்பழகன் வேண்டுகோள் விடுத்தார்.
புயலின் கோர தாண்டவத்தால் மக்களும், மரங்களும் பெரும் அழிவை சந்தித்து பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகின்றனர். இதனால் வருகின்ற 19ஆம் தேதி எனது 97வது பிறந்தநாள் விழாவை தவிர்க்க வேண்டுமென விழைகிறேன்.
மேலும் அன்று என் உடல்நிலை பற்றி அறிந்து கொள்ள நேரில் வந்து காண்பதை அனைவரும் முழுமையாக தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.