எதிர்பார்ப்பில் தமிழ் ரசிகர்கள்?

இளைய தளபதி விஜய் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து நடிக்கும் படத்தை அட்லி இயக்கி வருகிறார். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் இந்த படத்தில் கதிர், யோகி பாபு, விவேக் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கின்றனர். தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கபடுகிறது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் தொலைகாட்சி உரிமையை சன் தொலைகாட்சி கைபற்றி உள்ளது. தெறி,மெர்சல் படங்களுக்கு அடுத்ததாக விஜய் அட்லியுடன் இந்த படத்தில் இணைந்து உள்ளார். நடிகை நயன்தாரா ராஜா, ராணி திரை படத்திற்க்கு பிறகு தற்போதுதான் அட்லி படத்தில் நடிக்கிறார். இதனால் தற்போதே விஜய் மற்றும் நயன்தாரா ரசிகர்களுக்கு இடையே இந்த படத்திற்க்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்த படத்தின் படபிடிப்பு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *