நேற்று நடைபெற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் மேகதாது தடுப்பணைக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து – மத்திய அரசின் பழிவாங்கல் நடவடிக்கைகளையும், மாநில அரசு இவ்விவகாரத்தில் செய்யத் தவறிய விஷயங்களையும் குறிப்பிட்டு உரையாற்றினேன்!
அதேபோல், சட்டமன்றத்தில் கஜா புயல் பாதிப்பு குறித்தும், மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணம் குறித்தும் விவாதிக்க சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை நாளை வரை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தேன். மக்களின் வலியை உணராமல் இந்த அரசு அக்கோரிக்கையை ஏற்காதது கண்டனத்துக்குரியது.