பாரத பிரதமர் மோடி அவர்கள் நலத்திட்டங்களை துவக்கி வைக்க பஞ்சாப் மாநிலம் சென்றார். விமானம் மூலம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்த இடத்துக்கு செல்ல இருந்த பிரதமர் அங்கு நிலவிய கடுமையான வானிலை மாற்றத்தால் விமானப் பயணத்தை ரத்து செய்து தரை வழி மார்க்கமாக செல்ல முடிவு செய்தனர். தரைவழி மார்க்கமாக சென்று கொண்டு இருந்தபோது அங்கு போராட்டம் நடைபெற்று கொண்டிருந்ததால் அங்கு செல்ல இயலவில்லை ஆதலால் தனது பயணத்தை ரத்து செய்து விட்டு திரும்பி விட்டார். இது குறித்து பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி அவர்கள் தான் உயிருடன் திரும்பி வந்ததற்கு நன்றி என பஞ்சாப் மாநில முதல்வர் அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த பஞ்சாப் மாநில முதல்வர் தங்களிடம் தனது பயணம் குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை என அவர் கூறியுள்ளார். ஆக மொத்தத்தில் நாட்டையே ஆளும் பிரதமரும்¸ மாநிலத்தையே ஆளும் முதலமைச்சரும் இவ்வாறு பேசினால் சாதரண குடிமக்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் கூறும் வார்த்தையின் அர்த்தம் தெரிந்துதான் பேசிகிறார்களா என்பதே புரியவில்லை¸ சட்டங்கள் போடுவார்கள்¸ அதிகாரம் பண்ணுவார்கள். நேரிடையாகவே¸ மறைமுகமாக அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள. தங்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் நாம் என்ன செய்வது?
எங்கே தவறு?
