பொய்யர்களின் பேச்சு

எங்களுக்கு உணவு,மற்ற உதவிகளை எதிர்பார்க்கவில்லை. பாதிக்கப்படட மக்களுக்கு  உதவிகள் கூடத் தாமதம் ஆனாலும் பரவாயில்லை.

இந்த அரசாங்கத்தில் பொறுப்பில் உள்ளவர்களின் பொறுப்பற்ற பேச்சில் மக்கள் மிகவும் மன வேதனை அடைந்துள்ளனர்.

மக்களுக்கு ஆறுதல் சொல்லவேண்டியவர்கள் ஏதோ ஒன்று நடக்காதது போல் பேசுவது மக்களின் கொந்தளிப்பை அதிகரித்துள்ளது. இவர்கள் நோக்கம் என்ன என்பது அணைவருக்கும், வெளி உலகிற்க்கும் எதுவும் தெரியக் கூடாது என்பதே இவர்கள் நோக்கம் என்பது தெரிகிறது.

அமைச்சர்களின் பேச்சு பின்வருமாறு

பொன்னார்:

மத்திய மாநில அரசுகள் புயலை சிறப்பாக எதிர் கொண்டது

கஜா புயல் தொடர்பாகத் தமிழக அரசின் பணிகள் திருப்திகரமாக உள்ளது. முதல் நாளில் குறிப்பாகப் புயல் தாக்கிய சில மணி நேரங்களிலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருப்பிடம், உணவு, சுகாதாரம் போன்ற பணிகளை உடனடியாகச் செய்திருந்தார்கள். அமைச்சர்கள் அனைவரும் களத்தில் உள்ளனர். மூத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்

சீனிவாசன்:

புயல்கள் நிறைய வரட்டும் அப்பாதன் ஆறுகள் நிரப்பும்

ராஜேந்திர பாலாஜி:

கஜா புயல் கூஜா ஆகிவிட்டது.

தமிழகத்தைக் கஜா புயல் கடுமையாகத் தாக்கும் என்று எல்லோரும் கூறிய நிலையில், தமிழக அரசின் பேரிடர் மீட்புக்குழு மூலமாக எடுத்த சிறப்பான நடவடிக்கையால் பெருமளவில் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால், கஜா புயல் கூஜா புயல் ஆகிவிட்டது’

உதயகுமார்

கஜா புயலை விரட்டிவிட்டோம்(புன்முறுவலுடன்)

இந்தப் பேச்சுகள் எல்லாம் அரசாங்கத்தில் முதல் அமைச்சர் அதிகாரத்தில் உள்ளவர்கள் கண்டு கொள்கிறார்களா? அல்லது அவர்களுக்கும் தெரியாதா? அவர்கள் இவற்றைச் செய்யச் சொல்கிறார்களா? என்பது கடவுளுக்கு வெளிச்சம்.

எப்பொழுது மக்களுக்கு வெளிச்சம் கிடைக்க போவதுமில்லை, அப்படி கிடைத்துவிட்டால் இவர்கள் எதை வைத்து அரசியல் பன்னுவார்கள் எனத் தெரியவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *