உலக கோப்பைலும் தாக்கத்தை ஏற்படுத்துமா ரஸ்ஸல் புயல்?

அடுத்த மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்கும் உலக கோப்பைக்கான விண்டீஸ் அணி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.ஜேசன் ஹோல்டர் தலைமையிலான அந்த அணியில் ரஸ்ஸல் இடம்பெற்று உள்ளார். தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் கலக்கி வரும் ரஸ்ஸல் உலக கோப்பைலும் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.

அனுபவமிக்க நட்சத்திர வீரர் பொலார்டு அணியில் இடம்பெறாதது அந்நாட்டு ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தபோதிலும் கிறிஸ் கெய்ல், ஷாய் ஹோப், லீவிஸ், நிகோலஸ் பூரன், ஹெட்மயர் என பேட்டிங்கில் வலுவான அணியாகவே விண்டீஸ் உலககோப்பையில் களம் இறங்குகிறது.


உலக கோப்பைக்கான விண்டீஸ் அணி முழு விவரம்:

ஹோல்டர் (கேப்டன்), ஆண்ட்ரியூ ரசல், ஆஸ்லெ நர்ஸ், கார்லஸ் பிராத்வொய்ட், கிரிஸ் கெய்ல், டேரன் பிராவோ, ஈவன் லீவிஸ், ஃபேபியன் ஆலன், கீமர் ரோச், நிக்கோலஸ் பூரன், ஓஸ்னே தாமஸ், ஷாய் ஹோப், சனோன் கேப்ரியல், செல்டன் காட்ரல், சிம்ரன் ஹெய்ட்மர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *