உலக கோப்பைக்கு தயார் _ விராட் கோலி

இந்திய  அணி  உலகக்கோப்பை  தொடருக்கு  தயாராக இருப்பதாகவும்,  ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில்  இந்தியா  தோல்வி அடைந்தது எந்த விதத்திலும் வீரர்களை பாதிக்கவில்லை எனவும் கேப்டன்  கோலி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் முதல் இரண்டு  போட்டிகளில்  வெற்றி  பெற்ற  இந்திய  அணி அடுத்த  மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை 2-3 என  இழந்தது. இதை அடுத்து,  உலகக்கோப்பை தொடருக்கு  முன் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  உலகக்கோப்பை தொடருக்கு இந்தியா சரியான  அணியை தேர்வு செய்யுமா?  என்ற கேள்வியும் எழுந்தது.

இதற்கு  பதில் அளிக்கும் வகையில் பேசிய கேப்டன் கோலி, இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்கு தயாராக இருப்பதாகவும், உலகக்கோப்பை  தொடருக்கான  11 வீரர்கள் யார் என்பதில்  தெளிவாக இருப்பதாகவும்  கூறியுள்ளார்.  இன்னும் ஒரே ஒரு இடத்திற்கு மட்டுமே எந்த வீரரை தேர்வு செய்யலாம் என்பதில் குழப்பம் உள்ளது. ஹர்திக் பண்டியா  மீண்டும் அணிக்கு திரும்பினால் அதுவும் சரியாகிவிடும் என விராட் கோலி செய்தியாளர்களிடம் பேட்டியில் கூறியுள்ளார்..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *