உலகிலேயே மிக வெற்றிகரமான கல்விமுறையை ஃபின்லாந்து நாடு பின்பற்றுகிறது. என்று உங்களுக்கு தெரியுமா? அங்கு மாணவர்கள் மிகக் குறைந்த நேரமே பள்ளியில் செலவிடுகிறார்கள். அதுமட்டுமில்லை. தேர்வுகளும் வீட்டுப்பாடங்களும் மிகக் குறைவே.
சர்வதேச மாணவர் மதிப்பீட்டின்படி, ஃபின்லாந்து நாட்டு மாணவர்கள் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதோடு, மற்ற நாடுகளைவிட அதிக நேரம் படிப்பதில் செலவிடுகிறார்கள்.
ஆனால், 1960களின் இறுதிவரை, 10 சதவீத ஃபின்லாந்து மாணவர்கள் மட்டுமே மேல்நிலைபள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார்கள்.
புதுமையான சீர்த்திருத்தங்கள்:
தலைநகர் ஹெல்சின்கியில் இருக்கிறது விக்கி பள்ளி. இங்கு பணக்காரர்கள் மற்றும் பணிபுரியும் வர்கத்தின் குழந்தைகள் என அனைவரும் ஒன்றாக அமர்கின்றனர்.
பள்ளிக்கட்டணம் என்று எதுவும் கிடையாது. மேலும், பள்ளிக்கு தேவையான அனைத்தும் இலவசம்.
முதல்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 940 மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் அவர்களுக்கு மருத்துவ மற்றும் பல் மருத்துவ உதவிகளும் உண்டு. இவை உளவியலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவோடு நடக்கிறது.
சமமில்லாத வருமானம், ஏழ்மை உள்ளிட்டவையும் கல்வி முறைகளை மேம்படுத்துவதில் முக்கிய தாக்கம் செலுத்துவதை புரிந்து கொள்ள முடிவதாக மேலும் அவர் புத்தகத்தில் பசி எழுதியுள்ளார்.
மக்கள் நலன்:
ஃபின்லாந்து அரசின் பெரியளவிலான சமூக திட்டங்களும், அந்நாட்டு கல்விக் கொள்கைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுகிறது. 51.6 சதவீதம் என்ற விகிதத்தில், உலகில் அதிக வரி வசூலிக்கும் நாடு ஃபின்லாந்து. அதனால் இத்திட்டங்கள் சாத்தியாமாகின்றன.
எனினும், 2018ஆம் ஆண்டின் மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலை ஐ.நா வெளியிட்டதில், ஃபின்லாந்து முதலிடம் பிடித்தது.
பசி சல்பர்க் கூறுகையில், “சிறிய மற்றும் குறைந்த மக்கள் தொகை (5.5 மில்லியன் மக்கள்) கொண்ட நாடான ஃபின்லாந்தில், கல்விக் கொள்கைகள் வகுத்து, சமூக திட்டங்களை செயல்படுத்துவது என்பது சற்று எளிதாக இருக்கும். பெரிய மற்றும் பலதரப்பட்ட மக்கள் வசிக்கும் நாடுகளில் இது கடினமானது” என்கிறார்.
“நேர்மை, நியாயம் மற்றும் சமூகநீதி ஆகியவை ஃபின்லாந்து மக்களின் வாழ்வில் ஆழமாக கலந்துள்ளது. மக்களிடத்தில் மிக அதிகமான பொறுப்பு உள்ளது. அப்பொறுப்பு தங்கள் வாழ்க்கைக்கானது மட்டுமல்ல, பிறர் வாழ்க்கைக்கானதும்”.