இந்தியாவில் சினிமாவையும், சினிமா கலைஞர்களையும் கொண்டாடுவது போல் மக்கள் கொண்டாடும் ஒரு விஷயம் வேறில்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு சினிமாவை நேசிக்கக்கூடிய ரசிகர்கள் இந்தியாவில் அதிகம்.
ஒவ்வொரு முன்னணி நடிகர்களின் திரைப்படம் வரும் பொழுது ஊர் முழுக்க போஸ்டர்கள், பேனர்கள், உயர்ந்த கட்அவுட்டுகள் வைத்து அந்த கலைஞனை கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.
அந்த விதத்தில் இந்த ஆண்டு தொடங்கத்தில் உலகிலேயே நீளமான கட்அவும் அஜித்திற்கு அவருடைய ரசிகர்கள் வைத்து கொண்டாடினார்கள். இவருக்கு முன்பு கேரளாவில் விஜய்க்கு மிகப்பெரிய கட்அவுட் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கலாச்சாரத்தின் தொடர்ச்சியாக இவை இரண்டையும் முறியடிக்கும் விதமாக சூர்யா ரசிகர்கள் விஜய், அஜித்திற்கு வைக்கப்பட்ட கட்அவுட்டை விட உயரமான கட்அவுட் ஒன்றை தயார் செய்துள்ளனர் சூர்யா ரசிகர்கள்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா- சாய் பல்லவி நடித்திருக்கும் என்.ஜி.கே படம் வரும் 31அன்று வெளியாக இருப்பதால் அதனை கொண்டாடும் விதமாக சூர்யாவின் ரசிகர்கள் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் படுவைரலாக பரவி வருகிறது.