நாய்கள். பலருக்கு மனிதர்களை விட நாய்கள் மீதுதான் பற்றும் ஆசையும் அதிகமாக இருக்கும். ஆனால், ‘உலகின் அசிங்கமான நாய்க்கான போட்டி’ என்ற கான்டெஸ்ட் ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது என்பதை அறிவீர்களா. அப்படி நடந்த போட்டியில் ‘ஸ்காம்ப் தி டிராம்ப்’ என்ற நாய் முதல் பரிசைப் பெற்று, உலகின் அசிங்கமான நாய் என்கின்ற பட்டத்தையும் வென்றுள்ளது.
கலிபோர்னியாவின் பெடலூமா என்கின்ற இடத்தில்தான் இந்தப் போட்டி நடந்துள்ளது. ஸ்காம்ப் தி டிராம்ப் என்கின்ற நாயுடன் 18 நாய்கள், ‘உலகின் அசிங்கமான நாய்க்கான’ பட்டத்திற்குப் போட்டியிட்டன. ஆனால், அனைவரையும் வீழ்த்தி, 1,500 டாலர்கள் மதிப்பிலான பரிசுத் தொகையையும் வென்றுள்ளது ஸ்காம்ப் தி டிராம்ப்.
இந்தப் போட்டியில் கலந்து கொண்டது பற்றியும் ‘ஸாகாம்ப் தி டிராம்ப்’ பற்றியும், நாயின் உரிமையாளரான, வோனே மோரோன்ஸ், “2014 ஆம் ஆண்டில் ‘பெட்-ஃபைண்டர்’ மூலம் இந்த நாயை நான் கண்டடைந்தேன். பார்த்த முதல் தடவையே ஸ்காம்பை எனக்குப் பிடித்துவிட்டது. அதன் முகம் என்னை அப்படி கவர்ந்தது
உலகின் அசிங்கமான நாய்
