ஜம்மூ காஷ்மீர் அனாந்தாங் மாவட்டத்தில் இந்த வார ஆரம்பத்தில் இன்ஸ்பெக்டர் அர்ஷத் கான், தீவிரவாத தாக்குதலால் கொல்லப்பட்டார். இதையடுத்து அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
இந்த இறுதி சடங்கில் போது அர்ஷின் கானின் 4 வயது குழந்தையை அழுது கொண்டே தூக்கிச் சென்றாய்
அனாந்தாங் மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் குழு மீது கடந்த புதன் கிழமை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் 5 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். அர்ஷத் கானுக்கு இந்த தாக்குதல் போது பலத்த காயம் ஏற்பட்டது. அவர் ஞாயிற்றுக் கிழமை, டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
சி.ஆர்.பி.எப் குழு மீது தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகளில் ஒருவரை பாதுகாப்புப் படையினர் கொன்றுவிட்டனர்.
அர்ஷத் கான், ஸ்ரீநகரைச் சேர்ந்தவர். அவர் 2002 ஆம் ஆண்டு மாநிலத்தின் போலீஸாக தேர்வு செய்யப்பட்டார். கடைசியாக அவர் சதார் காவல் நிலையத்தில் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரியாக இருந்தார்.