இசைஞானி இளையராஜா தன் பாடல்களக்கு காப்புரிமை கேட்டு தொடர்ந்த வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது உயர் நீதிமன்றம்.
இளையராஜாவின் அனுமதியின்றி வணிக ரீதியாக அவரது பாடல்களை பாடக்கூடாது என்று அவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்த பாடல்களை, அகி இசை நிறுவனம், எக்கோ மியூசிக் நிறுவனம் கிரி டிரேடர்ஸ் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் தன்னுடைய அனுமதி பெறாமல் பயன்படுத்த தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த நிரந்திர தடை விதித்து நீதிபதி அனிதா சுமந்த் இன்று உத்தரவிட்டுள்ளார்.