மோடியின் ஆட்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே நீதி கேட்கும் நிலை உருவாகியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். குஜராத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், நீதிபதிகள் கூட சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும், அனைத்துத் துறைகளின் மீதும் அரசு அழுத்தம் செலுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். பொதுத்துறை வங்கிகளின் பல லட்சம் கோடி ரூபாய் கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், இந்த கடன் பெரும்பாலும் மோடியின் நண்பர்களான தொழிலதிபர்களுக்குதான் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உண்மையான பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காக காங்கிரஸ் மீது பாஜகவினர் அவதூறு பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளே நீதி கேட்கும் நிலை?
