தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய கூறி தொடரப்பட்ட வழக்கில் பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி ஆணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணையை ரத்து செய்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட கூறியும் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
