இஸ்ரோவிற்கு தினகரன் வாழ்த்து

இந்திய ராணுவ பயன்பாட்டுக்காக நமது பாதுகாப்புத்துறை உருவாக்கிய மைக்ரோசாட்-ஆர் செயற்கைகோளை குறைந்த செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி நிலைநிறுத்திய இஸ்ரோ.

அதே ராக்கெட்டில் நமது மாணவச் செல்வங்கள் அறிவியல் சோதனைகளுக்காக உருவாக்கிய கலாம்சாட் – V2 செயற்கைகோளும் வெற்றிகரமாக ஏவப்பட்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

விண்வெளி ஆராய்ச்சியில் மென்மேலும் பல சாதனைகளை எதிர்காலத்தில் மாணவ சமுதாயம் படைக்க இந்த கலாம்சாட் உந்துகோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அவர்களின் வெற்றிகரமான பங்களிப்பு மேலும் தொடர வாழ்த்துகள். மேலும் செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி நிலைநிறுத்திய இஸ்ரோவிற்கு வாழ்த்துகள் என டிடிவி தினகரன் அவர்கள் தனது டூவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *