இளையராஜாவை புகழ்ந்து பேசிய கமல்,
“இளையராஜாவிடம் பணியாற்றி விட்டு நான் வேறொருவரிடம் பணியாற்ற சென்றிருந்தேன். அப்போது நானே இயக்கி ஒரு படத்தை வெளியிட முடிவு செய்திருந்தேன். படப்பிடிப்பு முடிந்தது, பாடல்கள் காட்சியாக்கப்பட்டுவிட்டது. சில காரணங்களால் அந்த படத்தின் பாடல்கள் ரீரெக்கார்டிங் செய்யும் சூழல் ஏற்பட்டுவிட்டது. என்ன செய்வதென்றே தெரியாமல், நான் இளையராஜாவிடம் சென்றேன்.
அவர் ஏற்கனவே போடப்பட்ட பட்ஜெட்டைவிட குறைவாக நான் இதை முடித்து கொடுக்கிறேன் என்றார். காட்சிகளை எதையும் மாற்ற வேண்டாம் என்று கூறினார். அது எப்படி முடியும், என்று எனக்கு பெரும் கவலை இருந்தது. அச்சத்தோடுதான் அந்த வேலையை அவரிடத்தில் நான் கொடுத்தேன். பாடல்களை முடித்துக்கொடுத்ததோடு. அவர் ஒரு பாடலையும் அந்த படத்தில் போட்டிருந்தார். வெறும் சில நிமிட காட்சிகளை மட்டுமே வைத்து அந்த இடத்தில் ஒரு பாடலை வைக்க முடியுமா என்ற என் கேள்வியை உடைத்து என்னை ஆச்சரியப்படவைத்தார். அந்த படம்தான் “ஹேராம்”” என்று நெகிழ்சியாக கூறினார்.