இந்தியாவின் வளர்ந்து வரும் இளம் வீரர் 19 வயதான ஷுப்மன் கில் தற்போது நடந்து வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்று உள்ளார். இவர் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஷுப்மன் கில் வலை பயிற்சியில் ஆடியதை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். நான் கூட 19 வயதில் இப்படி ஆடவில்லையே என நினைக்க வைத்து விட்டார் என புகழ்ந்து கூறியுள்ளார்.
கடந்த வருடம் நியூசிலாந்தில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோர் உலககோப்பையில் ஷுப்மன் கில் தொடர்நாயகன் விருதை வென்றது குறிப்பிட்டதக்கது. இவரும் ராகுல் டிராவிட்டின் சிஷ்யர் என்பது கூடுதல் செய்தி.