இலங்கை பிரச்சினைக்கு யார் காரணம்?

தற்பொழுது இலங்கையில் நடந்து வரும் குழப்பங்களுக்குக் காரணம் யார்?

அதிபர் சிறிசேனா அவர்கள், அவரது பேச்சும் நடவடிக்கையும் சர்வதேச அளவில் உற்று நோக்குவதை மறந்துவிட்டார். அவரது நிலைப்பாடும், கொள்கையும் ஊர் நன்கு அறிந்ததே.
பாராளுமன்றத்தை கலைத்தது முதல் இன்று வரை அவருக்குச் சாதகமாக எதுவுமே இல்லை! இல்லாவிட்டாலும், சாதகமாக்கி கொள்ள முயல்கிறார். ஆனால் அது முடியாது என்பதை உணர்ந்தாலும் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

ராஜபக்சேவால் ஆதாயம் அடைந்து, வெளி உலகத்துக்குத் தெரிந்தவர் தனக்கு லாபம் வருகிறது என்ற உடன் ராஜபக்சேவையை உதறி தனிக்கட்சி ஆரம்பித்தார்.

ராஜபக்சேயின் ஊழல், ஆடம்பரத்தால் வெறுத்துபோன இலங்கை மக்கள் மாற்று யாராவது கிடைப்பார்கள என்று காத்து இருந்தார்கள். மக்களின் எண்ண ஒட்டத்தை அறிந்த சிறிசேனா மதில்மேல் பூனையாகக் காத்து இருந்தார்.

அப்பொழுது ரணில் விக்கிரமசிங்கே என்ற விலங்கு மீன் சிக்கியது. விக்கிரம சிங்கேக்கும், ராஜபக்சே என்ற மலையை உடைக்கச் சிறிசேனா உதவி தேவைப்பட்டது. அவரும் இணைந்து ஆளுக்கு ஒரு பதவியெனப் பிரித்துத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்கள்.

ராஜபக்சே என்னும் கழுகு தக்க காலத்துக்குக் காத்திருந்தது.எதிர்பார்த்தவாரே ரணிலுக்கும், சிறிசேனாவுக்கும் விரிசல் விழுந்தது. இதை ராஜபக்சே என்னும் கழுகு நன்கு பயன்படுத்திக் கொண்டது. அதன் பிறகு பல மாறுதல்கள் ஏற்பட்டாலும் ராஜபக்சேவுக்கும், சிறிசேனாவுக்கும் சாதகமான நிலை இன்னும் வரவில்லை.

தமிழ் சினிமாவில் சொல்லுவது போல் “வரும் ஆனால் வராது” என்பதை ராஜபக்சேவும், சிறிசேனாவும் உணர்ந்து விட்டார்கள்.

சில நாட்களுக்கு முன்பு எக்காரணம் கொண்டும் விக்கிரமசிங்கே பிரதமராக ஏற்றுக் கொள்ள முடியாது என்று சர்வதிகாரமாகச் சிறிசேனா அறிவித்தார். அவரது சிறுபிள்ளைத்தனமான பேச்சு சர்வதேச அளவில் கண்டனத்தை ஏற்படுத்தியது. இரண்டுமுறை பாராளுமன்றத்தை கூட்டியும் அவர்களால் மெஜாரிட்டியை நிருப்பிக்க முடிய வில்லை.

மெஜாரிட்டியை நிரூபித்தவரை ஏற்றுக்கொள்ள முடியாது. இவர் எல்லாம் அதிபர் என்றால் என்னவென்று சொல்வது. நம்நாடு எவ்வளதோ பரவாயில்லை என்பதை நம் மனம் உணர்த்தியது.

தற்பொழுது அறிவித்துள்ளார் யாருக்கு மெஜாரிட்டி உள்ளதோ அவரை ஏற்றுக்கொள்ளத் தயாரென அறிவித்துள்ளார். உலக நாடுகளின் அழுத்தமே என்பதை நாம் எல்லாம் அறிவோம். “இதற்கு மேல் அடித்தால் அழுதுவிடுவேன்” என்பது போல் உள்ளது.

என்ன ஒரு சின்னப்பிள்ளைத்தனம் வெட்கம் கெட்ட மனிதர்கள். பதவி சுகம் தேவைதான். அதிகமான சுகம் சுமையாக மாறும் என்பதே சிறிசேனா விஷயத்தில் உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *