இலங்கை  உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இலங்கையில் தொடர்ந்து நடந்துவரும் அரசியல்சூழ்நிலை மிகவும் கடினமான இடத்தில் உள்ளது. இதற்கு முன்பு இலங்கை  இது சம்பந்தமான விசாரணை நேன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. சிறிசேனா தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜெய சூர்யா வாதாடினார். மேலும் அவர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சரியான முறை என்றும், அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதிகள் இலங்கை அதிபரின் உத்தரவுக்குத் தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் ஜனவரி 5ஆம் தேதி தேர்தல் உந்தரவை ரத்து செய்து எந்தவிதமான முன்னேற்பாடுகளும் செய்யக் கூடாது என உத்தரவிட்டனர். இந்த விசாரணை மீண்டும்  டிசம்பர் 4, 5, 6 தேதிகளில் நடைபெறும், அன்று முழுமையான தீர்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர். இது மக்களுக்கும்,  ஜனநாயக வாதிகளுக்கும் கிடைத்த உண்மையான வெற்றியெனப் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ராஜபக்சே சிறிசேன அரசின் திட்டங்களுக்குத் தற்கால தடை ஏற்பட்டுள்ளது.

 

ஆரம்பத்திலிருந்து இவற்றில் நடந்தது என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே அமைச்சரவையிலிருந்து விலகிக் கருத்து வேறுபாட்டின் காரணமாகத் தனிக்கட்சி துவங்கி தற்பொழுது அதிபர் சிறிசேனா அவர்கள் விக்கிரமசிங்குடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தார்கள்.
ராஜபக்சே அணிக்கும், சிறிசேனா தலைமையிலான அணிக்கும் கடும் போட்டி நிலவியது. அவற்றில் 62,17,162 ஒட்டுகள் சிறிசேனாவுக்கும். ராஜபக்சேவுக்கு 57,68,090 ஒட்டுகளும் கிடைத்தன.
சதவீதப்படி 51.28 % ஒட்டுகள் சிறிசேனாவுக்கும். 47.58 % ஒட்டுகள் ராஜபக்சேவுக்கும் கிடைத்தது. தேர்தல் முடிவில் அதிபராகச் சிறிசேனா பொறுப்பேற்றார்.பிரதமராக ரணில் விக்கிரமசிங் பொறுப்பேற்றார்.ஆரம்பத்தில் இருவரும் இணைத்துச் செயல்பட்டார்கள் தேனிலவு முடிந்து பிரச்சினைகள் ஆரம்பம் ஆனது.இந்தச் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த ராஜபக்சே பிரச்சினையை அதிகப்படுத்தினார். ராஜபக்சேவுக்கும் சிறிசேனாவுக்கும் கள்ள உறவு ஏற்பட்டது.அது தற்பொழுது வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்து விட்டது. இதன் விளைவாக ராஜபக்சேயை பிரதமராக அதிபர் அறிவித்தார்.ஐ நாச் சபை மற்றும் வெளிநாடுகளின் நெறுக்குதல் காரணமாக அதிபர் திணறி உள்ளார். எப்படியும் உறுப்பினர்களைக் கைப்பற்றி ராஜபக்சே பிரதமராக முதலில் நாடாளுமன்றத்தை முடக்கினார்.பிறகு தேதியைத் தள்ளி வைத்தார். உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருவதால் எப்படியும் ராஜபக்சே பிரதமராக வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

ராஜபக்சேயின் அமைச்சர் விலகல்:

இலங்கையில் கடும் குழப்பங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு உள்ளது.ராஜபக்சேயை பிரதமராக அதிபர் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற சபாநாயகர் அதை ஏற்க மறுத்து ரணில் விக்ரமசிங்கே பிரதமராக இருப்பாரென அறிவித்தார்.அதன் பிறகு இலங்கை அதிபர் பாராளுமன்றத்தை முடக்கினார். பிறகு 5-ம் தேதி கூடும் என அறிவித்தார்.பிறகு 16-ம் தேதி எனவும், இப்பொழுது 14-ம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ராஜபக்சே தனது அமைச்சரவையை அறிவித்தார். இதன் மூலம் தனது ஆதரவு உறுப்பினர்களைப் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் அமைச்சரை நியமித்தார்.அதில் துணை அமைச்சராக மனுவி நானயக்கார என்பவரை ராஜபக்சே அறிவித்தார். அவர் திடீர் என “ராஜபக்சே அமைச்சரவையில் இடம் பெற மறுத்து விட்டு ரணில் விக்கிரமசிங்கேக்கு” ஆதரவு தெரிவித்து உள்ளார்.

அவர் தனது முடிவைப் பாராளுமன்ற சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில் ராஜபக்சேயை பிரதமராக ஏற்க மறுத்து உள்ளார்.மேலும் சட்டப்படி “ரணில் விக்கிரமசிங்கேயே பிரதமர்” எனவும் தெரிவித்துள்ளார். இது ராஜபக்சேவுக்கு திருடனுக்குத் தேள் கொட்டியது போல் உள்ளது. இதற்கிடையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ராஜபக்சேவுக்கு ஆதரவு அளிக்க மறுத்து விட்டது. இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் கூறிவிட்டது.

இந்நிலையில் முன்னாள் இலங்கைக் அதிபர் ராஜபக்சே அவர்கள் சிறிசேனா தலைமையிலான சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளார். அவருடன் 50 முன்னாள் எம்பிக்களும் இணைந்துள்ளனர். இதனால் சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இப்பிரச்சனையை எவ்வாறு சிறிசேனா எதிர்கொள்ளப் போகிறார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இன்று கொழும்பிலுள்ள பொதுஜன முன்னணி அலுவலகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன் விவரம் பின்வருமாறு பொதுஜன முன்னணி 50 லட்சத்து 6 ஆயிரத்து 737 ஓட்டுகளை பெற்றது. ஆனால் சிறிசேனா தலைமையிலான கட்சி 14 லட்சத்து 97 ஆயிரத்து 234 ஓட்டுகளை மட்டுமே பெற்றது. ரனில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியில் 36 லட்சத்தில் 40 ஆயிரத்து 620 வாக்குகளைப் பெற்றது. இப்போது சிறிசேன தலைமையிலான கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. “வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்பது போல சிறிசேனவுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. சிறிசேனவின் ஆதரவாளர்கள் தனியாக ராஜபக்சேவுடன் சென்றுவிட்டதால். சிறிசேனவின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இத்தகைய சூழல் ரனில் விக்கிரமசிங்கே சாதகமான பலனை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சின்னமான தாமரை சின்னத்தில் வெற்றி பெறக் கூடும் என்பதால், ராஜபக்சேக்கு கூடுதலான ஓட்டுகளை எதிர்பார்க்கலாம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிறிசேனாவை கடுமையாகக்குற்றம் சாட்டுவதாக தெரிகிறது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் உள்ளவர்கள் பலவித குழப்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். சிறிசேனா செய்த அடுக்கடுக்கான தவறுகளால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கடும் பதற்றத்தில் உள்ளது. நாடு முழுவதும் இராணுவங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *