இலங்கையில் சண்டைகளும்? சச்சரவுகளும்?

இலங்கையில் கடும் அதிகாரப் போட்டி நடந்து வருகிறது. இவற்றின் ஆரம்பமும் முடிவும் விரைவில் தெரிய வந்து விடும்.ஆரம்பத்திலிருந்து இவற்றில் நடந்தது என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே அமைச்சரவையிலிருந்து விலகிக் கருத்து வேறுபாட்டின் காரணமாகத் தனிக்கட்சி துவங்கி தற்பொழுது அதிபர் சிறிசேனா அவர்கள் விக்கிரமசிங்குடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தார்கள்.
ராஜபக்சே அணிக்கும், சிறிசேனா தலைமையிலான அணிக்கும் கடும் போட்டி நிலவியது. அவற்றில் 62,17,162 ஒட்டுகள் சிறிசேனாவுக்கும். ராஜபக்சேவுக்கு 57,68,090 ஒட்டுகளும் கிடைத்தன.
சதவீதப்படி 51.28 % ஒட்டுகள் சிறிசேனாவுக்கும். 47.58 % ஒட்டுகள் ராஜபக்சேவுக்கும் கிடைத்தது. தேர்தல் முடிவில் அதிபராகச் சிறிசேனா பொறுப்பேற்றார்.பிரதமராக ரணில் விக்கிரமசிங் பொறுப்பேற்றார்.ஆரம்பத்தில் இருவரும் இணைத்துச் செயல்பட்டார்கள் தேனிலவு முடிந்து பிரச்சினைகள் ஆரம்பம் ஆனது.இந்தச் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த ராஜபக்சே பிரச்சினையை அதிகப்படுத்தினார். ராஜபக்சேவுக்கும் சிறிசேனாவுக்கும் கள்ள உறவு ஏற்பட்டது.அது தற்பொழுது வெளி உலகிற்கு தெரிய ஆரம்பித்து விட்டது. இதன் விளைவாக ராஜபக்சேயை பிரதமராக அதிபர் அறிவித்தார்.ஐ நாச் சபை மற்றும் வெளிநாடுகளின் நெறுக்குதல் காரணமாக அதிபர் திணறி உள்ளார். எப்படியும் உறுப்பினர்களைக் கைப்பற்றி ராஜபக்சே பிரதமராக முதலில் நாடாளுமன்றத்தை முடக்கினார்.பிறகு தேதியைத் தள்ளி வைத்தார். உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருவதால் எப்படியும் ராஜபக்சே பிரதமராக வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

ராஜபக்சேயின் அமைச்சர் விலகல்:

இலங்கையில் கடும் குழப்பங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு உள்ளது.ராஜபக்சேயை பிரதமராக அதிபர் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற சபாநாயகர் அதை ஏற்க மறுத்து ரணில் விக்ரமசிங்கே பிரதமராக இருப்பாரென அறிவித்தார்.அதன் பிறகு இலங்கை அதிபர் பாராளுமன்றத்தை முடக்கினார். பிறகு 5-ம் தேதி கூடும் என அறிவித்தார்.பிறகு 16-ம் தேதி எனவும், இப்பொழுது 14-ம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ராஜபக்சே தனது அமைச்சரவையை அறிவித்தார். இதன் மூலம் தனது ஆதரவு உறுப்பினர்களைப் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் அமைச்சரை நியமித்தார்.அதில் துணை அமைச்சராக மனுவி நானயக்கார என்பவரை ராஜபக்சே அறிவித்தார். அவர் திடீர் என “ராஜபக்சே அமைச்சரவையில் இடம் பெற மறுத்து விட்டு ரணில் விக்கிரமசிங்கேக்கு” ஆதரவு தெரிவித்து உள்ளார்.

அவர் தனது முடிவைப் பாராளுமன்ற சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில் ராஜபக்சேயை பிரதமராக ஏற்க மறுத்து உள்ளார்.மேலும் சட்டப்படி “ரணில் விக்கிரமசிங்கேயே பிரதமர்” எனவும் தெரிவித்துள்ளார். இது ராஜபக்சேவுக்கு திருடனுக்குத் தேள் கொட்டியது போல் உள்ளது. இதற்கிடையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ராஜபக்சேவுக்கு ஆதரவு அளிக்க மறுத்து விட்டது. இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் கூறிவிட்டது.
வருகிற 14-ம் தேதி கூடும் நாடாளுமன்றம் முடிவில் என்ன நடக்கிறது எனத் தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *