இறுதி வேட்பாளர்கள் பட்டியல்!

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு 2 லட்சத்து 6 ஆயிரத்து 657 மனுக்களும், கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கு 54 ஆயிரத்து 747 மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 32 ஆயிரத்து 939 மனுக்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 3 ஆயிரத்து 992 மனுக்களும் பெறப்பட்டன.தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் தங்களுடைய மனுக்களை திரும்ப பெறுவதற்கு 2 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது.

இன்று மதியம் 3 மணியுடன் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் முடிகிறது. இதையடுத்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யும் பணி நடைபெறும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *