ரஞ்சி கோப்பையில் இரண்டாம் அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடகம் மற்றும் சௌராஷ்டிரா அணிகள் நேற்று மோதின.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கர்நாடக அணி 9 விக்கெட்களை இழந்து 264 ரன்கள் எடுத்து உள்ளது.அந்த அணியின் மனிஷ் பான்டே 62 ரன்களும், ஷ்ரேயஸ் கோபால் 87 ரன்களும் எடுத்தனர்.ஸ்ரீநிவாஸ் சரத் 74 ரன்கள் உடன் களத்தில் உள்ளார்.சௌராஷ்டிரா அணியின் உணட்கட் 4 விக்கெட்களும், மக்வனா மூன்று விக்கெட்களும் கைபற்றி உள்ளனர்.