முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மறைவுக்கு திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார். அதில் முன்னாள் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும், தன் வாழ்நாள் முழுவதும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போர்க்குரல் எழுப்பியவருமான திரு ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. தலைவர் கலைஞரின் உற்ற நண்பர் , மாபெரும் மக்கள் தலைவர் என்றென்றும் இவர் புகழ் நிலைத்திருக்கும்! என தெரிவித்து உள்ளார்.