சிந்தனை துளிகள்
சாய்பாபா நற்சிந்தனைகள்
இந்த உடல் நமக்கு அளிக்கப்பட்டது, தெய்வீக அருளைப் பெறுவதற்காகவே. அதனால் இந்த உடல் நன்கு பராமரிக்கப்படவேண்டு;ம். சுத்தமாகவும், தூய்மையாகவும்,அழுக்கு, வியாதி, வருத்தம், தோல்வி மனப்பான்மை இவற்றால் பாதிக்கப்படாமலும் உடல் பாதுகாக்கப்பட வேண்டும்.
நீங்கள் உடலல்ல. உடல் என்பது ஒன்பது துவாரங்களடங்கிய அழியும் பொருளாகும்.ஆகவே இந்திரிய சுகத்தை புலனின்ப நுகர்ச்சியை நாடிச் செல்லாதீர்கள்.கடவைள நோக்கி மனதை திருப்புங்கள். அப்போது மனம் இயற்கையாகவே உலக இன்பத்தை நாடுவதை விட்டு விடும்.
பிறகு உங்கள் மனதின் மேல் நீங்கள் ஆதிக்கம் செலுத்துவது எளிதாகும்.புலன்களின் பேராசைக்கு இணங்குவதன் மூலம் ஒருவனுடைய ஆன்மீகபலமும், ஞானமும் படிப்படியாக மறைகின்றன. தீர்மானமான திட்டங்கள் மூலம் புலன்ஆசைகளை விட்டுவிட முயல வேண்டும்.ஆன்மீகப் பயிற்சிகளுக்கு இடைவேளை என்பதே கூடாது.
அப்படி விட்டுவிட்டுச் செய்யும் பயிற்சிகள், முந்தைய நல்ல பலன்களையும் அடித்துச் சென்று விடும்.அது மட்டுமின்றி உள்ளத்திலிருந்து துரத்தப்பட்ட எதிரிக்கு(தீயஎண்ணங்கள்) மீண்டும் நல்வரவு கூறுவதாக அமைந்துவிடும். சுயநலம், தியாகம் நிறைந்த தொடர்ந்த செயல்களால், மனம் தூய்மை அடைந்தாலன்றி இறைவனின் அருள் கிடைப்பதில்லை.
செல்வத்தை அதிகமாக சேர்ப்பதனால் ஏற்படும் துன்பங்களைப் பற்றி விவாதிப்பதன் மூலம் ஒருவன் பேராசையை விட்டுவிட முடியும்.வாழ்க்கையின் உண்மைகளை பற்றி ஆராய்ந்து தெளிவதன் மூலம் பயம் நீங்கும்.
ஆன்மீக உண்மைகளை கற்று அறிவதன் மூலம் வீண் புலம்பல்களையும் மாயையும் ஒருவன் வெல்ல முடியும்.தேவையுள்ள மனிதனுக்கு சேவை செய்வதன் மூலம் தற்பெருமை குறையும்.மௌனத்தின் மூலம் ஆன்மீகப் பாதையின் தடங்கல்களை நீக்கி வெற்றி பெறலாம்.
சமயத்தின் மையப்புள்ளி மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான உறவுபற்றியதாக இருக்கக் கூடாது, அது… மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவு பற்றியதாக இருக்க வேண்டும்.
எல்லோரும் இன்புற்றிருக்கும் நோக்கில்… ஒருவர் மற்றொருவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்பிப்பதே சமயத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்”
– பேராசான் கௌதம புத்தர் –
கிருபானந்த வாரியார்-நற் சிந்தனைகள்
கொடுத்த கடனைத்திருப்பிக் கொடுக்காதது எவ்வளவு பெரிய பாவமோ அத்தனை பெரிய பாவம் இறைவனை நாள்தோறும் வணங்காததும் ஆகும். அதனால் தான் “என் கடன் பணி செய்து கிடப்பதே“ என்றார் அப்பர். இறைவன் தந்த உடம்பினால் அவனை வழிபடுவதை “அவனருளாலே அவன் தாள் வணங்கி“ என்கிறார் மாணிக்கவாசகர்.
இயேசுவின் பொன்மொழிகள்
மனிதனுக்குள்ளே இருந்து வெளிவரும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தி விடுகிறது. கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் பிறக்கின்றன. அவன் மனதில் கெட்ட எண்ணங்கள், பாலியல் குற்றங்கள், களவு, கொலை, விபசாரம், சுயநலம், தீயச் செயல்கள், பொய், பொறாமை, புறங்கூறுதல், பெருமை பேசுதல், மூடவாழ்க்கை போன்றவை தோன்றும். இத்தகைய கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் வருகின்றன. இத்தீயவையே மனிதனை மாசுபடுத்துபவை.வலிமையின்மையே ஒருவனின் துன்பத்திற்கு காரணம். நாம் பலவீனமாக இருப்பதாலேயே பொய்யும் திருட்டும் ஏமாற்று வேலைகளும் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை.
நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள்!
எந்த மனிதனும் அவன் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை. எந்த பூமியில் மரணமடைவோம் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. திண்ணமாக, இறைவன் தான் யாவற்றையும் நன்கு அறிபவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.
பொன்மொழிகள்:-
- துன்பப்படுவோர் மத்தியில், நாம் மகிழ்ச்சியாக வாழ்வது கொடுமையிலும் கொடுமை.
– புத்தர்.
- இன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே. அது போகும் போது அதைப் பற்றி சிந்தனை செய்.
– அரிஸ்டாட்டில்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது பிறரை மகிழ வைப்பதில்தான் இருக்கிறது.
– மெஹர்பாபா.
- உலகம் மிகப் பரந்தது. அதில் அவர்கள் முயற்சியைப் பொறுத்தும், திறமையைப் பொறுத்தும் எல்லோரும் முன்னேறுகின்றனர்.
– ஐன்ஸ்டீன்
- தவறுக்கு வருந்தாதே. திருத்திக் கொள்வதில் வெட்கப்படாதே.
– சாக்ரடீஸ்.
- எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் ஒதுக்காதே. உன் பணியை ஊக்கமுடன் செய்.
– அரவிந்தர்.
- தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தாத மனிதன் தனக்குள் உள்ள திறமையையும் வெற்றியாக மாற்ற முடியாது.
– எட்கார் ஆலன்யோ.
- உன்னால் உன் இஷ்டப்படி வாழ முடியாவிட்டால் உன்னால் இயன்றதை வாழ்ந்து விடு.
– கிரேஸியன்.
- யாரும் எதையும் சொல்லலாம். ஆனால் எல்லோருடைய சொல்லையும் நம்பாதீர்கள்.
– மாண்டேயின்.