ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் இன்று மாலை 6.30 மணியளவில் திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்திக்கிறார்.
இச்சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை எதிர்நோக்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தனது வேகத்தைக் காட்டவுள்ளன.
சந்திரபாபு நாயுடு அவர்கள் டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து முக்கிய ஆலோசனையை நடத்தினார்கள்.அப்பொழுது சந்திரபாபு நாயுடு அவர்கள் விரைவில் மு.க.ஸ்டாலினை சந்திக்க இருப்பதாகத் தெரிவித்தார்.அதை மு.க.ஸ்டாலின் அவர்கள் வரவேற்றார்.