இன்று எங்கெல்லாம் மழை

இந்திய வானிலை மையத்தின் சென்னை மண்டலம், தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளது.

“இன்று பொதுவாக மிதமானது முதல் லேசான மழை மாநிலத்தின் ஆங்காங்கே பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் தேனி மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.

சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம், மேகமூட்டத்துடன் இருக்கும். மிதமானது முதல் லேசான மழை பெய்யு வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளது வானிலை மையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *