டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரை 10 கிலோமீட்டர் வரையிலான மெட்ரோ ரயில் சுரங்கபாதையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். தினம்தோறும் அண்ணாசாலையில் ஏற்படும் வாகன நெரிசலை பெருமளவில் இந்த மெட்ரோ ரயில் சேவை குறைக்கும் என கூறப்படுகிறது.
வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான வழித்தடத்திற்கு அதிபட்சம் 60 ரூபாயும், சென்டிரல் ரயில்நிலையம் முதல் கோயம்பேடு வழியாக ஆலந்தூர் வரையிலான வழித்தடத்திற்கு அதிகபட்சமாக 50 ரூபாயும் டிக்கெட் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் முதல் வழித்தடத்தில் சேவை முழுமையாக துவங்கியுள்ள நிலையில் இன்று இரவு வரையில் அனைத்து வழித்தடங்களிலும் பொதுமக்கள் இலவசமாக மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.