வங்ககடல் பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்து வருகிறது. வெப்பசலனமும் இந்த மழைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த மழை ஒரு வாரம் வரை நீடிக்கும்.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. அப்படி மாறும் பட்சத்தில் அது புயலை உருவாக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அன்று 25 செமீ மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் கனமழை பெய்யும். இன்று மிக அதிக அளவில் மழை பல்வேறு மாவட்டங்களில் பெய்ய உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகிகள் கவனமாக இருக்க வேண்டும், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.