ஸ்ரீநகர், ஜம்மு – காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று கொண்டே வருகிறது. இந்தநிலையில் கடந்த பிப்.26 அன்று இந்திய விமானப்படை நிகழ்த்திய குண்டு வீச்சு தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் அழிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று முன் தினம் இந்திய விமான படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.
இன்று அதிகாலை மீண்டும் காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பல தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்னும் சந்தேகத்தால் அங்கு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.