நாட்டின் முன்னனி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் மாதம் ரூ.35 ரீசார்ஜ் செய்தால் மட்டுமே தொடர்ந்து இன்கம்மிங்க் சேவைகளைப் பெற இயலும் எனச் சில தினங்களுக்கு முன் அறிவித்தன.
இதனால் அதன் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரம் டிராய் கவனத்திற்குச் சென்றது. இந்தப் புகார்கள் விசாரித்த டிராய் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதாவது சேவைகளை நிறுத்தக்கூடாது. மேலும் வாடிக்கையாளர்களின் சேவை நிறுத்த நேரிட்டால் 72 மணி நேரத்துக்கு முன்பாகவே எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்க வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.