இந்த வார இராசிப் பலன்கள் (09.01.2022 – 15.01.2022)

மேஷம்

மேஷ ராசி நேயர்களே இந்த வாரம் உங்களுக்கு பல விதத்திலும் சிறப்பான பலன்களை பெறும் வாரம். புதிய வேலை வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.  குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். உங்களின் தைரியமான முடிவுகள் உங்களுக்கு சாதகமான வெற்றியை தரும். வரும் வாரங்கள் மேலும் உங்களுக்கு சிறந்த பலன்களை கொடுக்கும் மொத்தத்தில் இந்த வாரம் ஏறுமுகமே.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே இந்த வாரம் அனைத்து முயற்சிகளும் சற்று தடைப்படும் வாரமிது¸ ஆனால் இறுதியில் உங்களுக்கு வெற்றி கிட்டும். மற்றவர்களுக்கு உங்களது கருத்துக்களை தெரிவிக்காமல் இருப்பது சிறப்பு. உடல்நிலை சம்பந்தமாக ஏதேனும் குறை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அனுகுவது நல்லது. மாணவர்களுக்கு சிறந்த வாரமிது¸ மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். தொழிலாளர்களுக்கு சுமாரான பலனையே தரும். தொழிலாளர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை தயார் படுத்திக் கொள்வதால் அதிக பலன்களைப் பெறலாம். தந்தையின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். மொத்தத்தில் பொறுமை¸ விடாமுயற்சி மூலம் சாதிக்கும் வாரமிது.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களே இந்த வாரம் நீங்கள் மிகவும் சௌகரியமாக உணர்வீர்கள். இதுவரை இருந்து வந்த எரிச்சல்¸ கோபம் போன்ற தொந்தரவுகள் குறைந்து மகிழ்ச்சி ஏற்படும். சமுதாயத்தின் மதிப்பு மரியாதை உயரும்¸ புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் திடீரென்று அதிர்ஷ்டம் வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்புண்டு. தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவி உறவில் சற்று பிரச்சனைகள் ஏற்படும்¸ தேவையற்ற வாக்குவாதம் ஏற்படும். சற்று நிதானத்துடன் செயல்பட்டு வெற்றியை ஈட்டும் வாரமிது.

கடகம்

கடக ராசி அன்பர்களே இந்த வாரம் எவற்றிலும் வெற்றி பெற பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை உருவாகும். கணவன் மனைவிக்கிடையே சற்று விட்டு கொடுத்து செல்லவும். வருமானம் வரவுக்கும் செலவுக்கும் சமமாக இருக்கும். புதிய முதலீடு பலன் தராது. ஆதலால்¸ பொறுமையாக சிந்தித்து முதலீடு செய்வது மத்திய பலனை தரும் தொழில் மற்றும் பணிபுரியும் இடங்களிலும் உங்கள் திறமைi பளிச்சிடும் மொத்தத்தில் சுமாரான வாரமிது.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களது வாழ்வின் உச்சகட்ட மகிழ்ச்சியை உணர உள்ளீர்கள். உங்களது ராசிநாதன் சிறப்பான இடத்தில் உள்ளதால். உங்களது அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும்.

நீண்ட நாட்களாக உங்களது திறமையை வெளிப்படுத்த காத்திருந்த நீங்கள் உங்களது திறமையை வெளிப்படுத்துவீர்கள். நண்பர்களுடன் வெளியில் சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. நீண்ட¸ குறுகிய தூர பயணம் மகிழ்ச்சியைத் தரும். கணவன் – மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்லவும். மொத்தத்தில் மகிழ்ச்சியை அனுபவிக்கும் வாரமிது.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே உங்களது திறமையை உலகம் உணரும் வாரமிது. கணவன் மனைவிக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்படும். வெளிப்புற சூழ்நிலை உங்களை அதிகமாக பாதிக்கும். இந்த வாரம் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. இன்டர்வியூ விஷயங்கள் வெற்றியை தேடித்தரும்¸ மாணவர்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். மொத்தத்தில் சுமாரான வாரமிது.

துலாம்

துலாம்  ராசி அன்பர்களே  நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சுப செய்தி வந்து சேரும் சிறப்பான வாரமிது¸ நீண்ட நாளாய் முயற்சிகள் வெற்றியைத் தரும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும் நீங்கள் கடுமையாக வேலை செய்து அலுவலகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள்¸ முயற்சியை கைவிட்டு விடாதீர்கள்¸ விரைவில் வெற்றியை அடைய போகிறீர்கள்¸ பிறரிடம் பேசும் போது கவனமாக செயல்படவும் மொத்தத்தில் இது சற்று அதிக முயற்சி தேவைப்படும் வாரமிது.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே இது உங்களுக்கு அற்புதமான வாரமிது¸ இதன் மூலம் உங்களது மதிப்பு¸ கௌரவம்¸ அந்தஸ்து¸ சமூகத்தில் உயரும். கணவன் மனைவி உறவு இனிக்கும். நீண்ட நாள் பிரச்சினைகள் தீரும் வாரமிது.

புதிய வேலை வாய்ப்புகள் வீட்டுக் கதவை தட்டும்¸ உங்களது வார்த்தையில் சற்று உஷ்ணம் வெளிப்படும் ஆகயால் யோசித்து பேசுவது நல்லது. இல்லாவிடில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்¸ மொத்தத்தில் சிறப்பான வாரமிது.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே  இந்த வாரம் கலவையான வாரம். அதாவது யோசித்து செயல்பட்டால் வெற்றி தேடி வரும். உங்களது மன ஓட்டம் அதிகமாக இருக்கும் ஆதலால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அனைத்து ஆசைகளும் பூர்த்தி அடைவது கஷ்டம்¸ கணவன் மனைவியிடையே சந்தேகங்கள் ஏற்படும்¸ சந்தேகப் படுவதை விட்டுவிடுங்கள். அலுவலகங்களில் சுமாரான சூழ்நிலையே இருக்கும். மொத்தத்தில் யோசித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

மகரம்

மகர ராசி அன்பர்களே நீண்ட நாட்களாக சலிப்புடன் காணப்பட்ட நீங்கள் பல திருப்பங்களை சந்திக்கும் வாரம். நீண்ட நாள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலைவாய்ப்பில் புதிய வாய்ப்புகள் தேடி வரும் ஆனால் சிந்தித்து செயல்படுவது நல்லது. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்¸ சிலருக்கு படித்த படிப்புக்கு சம்பந்தமில்லாத வேலையை பார்க்க நேரிடும். குடும்பத்தில் அமைதி நிலவும்¸ உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேவையற்ற கருத்துக்களை தவிர்க்கவும்.

கும்பம்

கும்பம்  ராசி அன்பர்களே உங்களது ராசிக்கு பல வாய்ப்புகள் கதவை தட்டும். உங்களது பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்களது திறமையை வெளிப்படுத்துவீர்கள்¸ வெளி உலகம் உங்கள் திறமையை அங்கீகரிக்கும். கணவன் மனைவி உறவு இனிக்கும் உங்கள் எதிரிகள் உங்களை கண்டால் ஓடி ஒளிந்து விடுவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்¸ உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கௌரவம்¸ அந்தஸ்து உயரும் வாரமிது. மொத்தத்தில் வளர்ச்சியான வாரம்.

மீனம்                

மீன ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களது திறமையை வெளி உலகுக்கு காட்டுவீர்கள்¸ வேலைவாய்ப்பில் புதிய மாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உங்களது திறமையை உணர்ந்து புதிய பொறுப்புகள் தேடி வரும். உடல் நிலையில் சற்று கவனம் செலுத்தவும்¸ மனதை ஒருநிலைப் படுத்தவும்¸ கணவன் மனைவியிடையே அன்னோன்யம் அதிகரிக்கும். கல்வியில் சற்று கவனம் செலுத்தவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மதிப்பு மரியாதை வரும். மொத்தத்தில் சிறப்பான வாரம்.