13 பேருடன் சென்ற இந்திய விமானப்படை விமானம் மாயம்!
இந்திய விமானப்படையை சேர்ந்த போக்குவரத்து விமானம், எட்டு குழு உறுப்பினர்கள் மற்றும் ஐந்து பயணிகளுடன் அசாமின் ஜோர்கத் தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற விமானம் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்டோனோவ் ஏன்- 32 ரக விமானம், அசாமின் ஜோர்கத் தளத்தில் இருந்து மதியம் 12.25க்கு புறப்பட்ட விமானம் காணாமல் போனதாக தகவல்,
கடைசியாக 1 மணிக்கு தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றதாக தெரிகிறது. அதிலிருந்து, தற்போது வரை விமானம் குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை என கூறப்படுகிறது.