இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரிசர்வ் வங்கி ஆர்டிஜிஎஸ் ( Real-Time Gross Settlement ) மற்றும் தேசிய மின்னணு நிதி பரிமாற்றத்தில் (NEFT) உள்ள கட்டணங்களை நீக்க முடிவெடுத்துள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. வங்கிகள் இப்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு இந்த பயனை உடனடியாக வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ஆர்டிஜிஎஸ் என்பது பணம் பரிமாற்றம் செய்யும் முறையாகும். இதில் வங்கி வேலை நேரத்தில் பணப்பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும்.

தேசிய மின்னணு நிதி பரிமாற்றத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட அளவிலான பணத்தை மட்டுமே அனுப்ப முடியும். ஆர்டிஜிஎஸ்ஸில் 2 லட்சம் மற்றும் அதற்கு மேல் அனுப்ப முடியும். உடனடியாக நிதிபரிமாற்றம் என்பது நிகழ்கிறது.

முன்னதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆர்டிஜிஎஸ் பணப் பரிமாற்றத்திற்கு ஒன்றரை மணிநேரம் வரை எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *