இந்திய பங்குச்சந்தைகளில் இன்றும் ஏற்றம் காணப்படுகிறது. இன்றைய காலை வர்த்தகத்தின்போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 140 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது. இதேபோல, தேசிய பங்குச் சந்தையிலும் இன்றைய காலை வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் நிஃப்டி 33 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது.
அன்னிய நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடு மற்றும் பங்குச்சந்தைகளில் சாதகமான நிலை காரணமாக ஏற்றம் காணப்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 24 பைசா அளவுக்கு வீழ்ச்சியடைந்து 69 ரூபாய் 78 காசுகளாக இருந்தது.