இந்திய செல்வந்தர்களிடம் செல்வம் குவிவது எப்படி?

இந்திய பொருளாதாரம் சரிவில் இருக்கும் நிலையிலும் செல்வந்தர்களின் பட்டியலில்
இடம்பெற்றிருக்கும் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு நான்கில் ஒரு பங்கு
அதிகரித்துள்ளது.
பொருளாதார மந்தநிலை நிலவினாலும் இந்தியாவின் பணக்காரர்களிடம் மேலும் அதிக
செல்வம் சேர்ந்திருக்கிறது. இதற்கு காரணம் பங்குச் சந்தை உயர்வு.
கடந்த நவம்பரில் அரசு மேற்கொண்ட பணவிலக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி
எனப்படும் சரக்கு மற்றும் சேவைகள் வரியின் தாக்கத்தினால் இந்த நிதியாண்டின் முதல்
காலாண்டிலேயே பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.7 சதவிகிதமாக சரிந்துவிட்டது.
ஆனால், பொருளாதாரம் பாதித்து மந்த கதியில் இருந்தாலும், செல்வந்தர்களின்
செல்வம் முன்னெப்போதையும்விட அதிக அளவு அதிகரித்துள்ளது. இந்தியாவின் முதல்
நூறு இடங்களில் இருக்கும் செல்வந்தர்களின் சொத்துக்களின் மதிப்பு 25 சதவிகிதம்
உயர்ந்து 479 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.

முகேஷ் அம்பானியின் சொத்துமதிப்பு ஒரு லட்சம் கோடி உயர்வு
இந்தப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ்
அம்பானி.
பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறையில் கோலோச்சும் முகேஷ் அம்பானிக்கு
கிடைத்த அளவு அதீத லாபம் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. அவரது சொத்து 15.3
பில்லியன் டாலர்கள் (சுமார் ஒரு லட்சம் கோடி) அதிகரித்திருக்கிறது. இந்திய
பணக்காரர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தில் வலுவாக இருக்கிறார்.
முகேஷ் அம்பானியின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு 38 பில்லியன் அமெரிக்க
டாலர்கள். அதாவது 2.47 லட்சம் கோடி ரூபாய்!

இரண்டாவது இடத்தை பிடித்திருக்கும் விப்ரோ நிறுவன உரிமையாளர் அஜிம்
பிரேம்ஜியின் சொத்து மதிப்பு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் பாதிதான்.
அதாவது 19 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ 1.2 லட்சம் கோடி) மட்டுமே.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் நல்ல லாபத்தை
ஈட்டியுயுள்ளன, ஜியோவின் தாக்கமே இதற்கு காரணம்.
இந்தப் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறார் குமார் பிர்லா. இந்த ஆண்டு அதிக
லாபம் அடைந்தவர்களில் ஒருவர் ஐடியா செல்லுலரின் உரிமையாளர் குமார் பிர்லா.
அவருடைய நிறுவனம் வோடாஃபோன் இந்தியாவுடன் இணைந்துவிட்டது.
27 செல்வந்தர்களின் சொத்து ஒரு பில்லியன் டாலர்களை விட அதிகமாகியிருக்கிறது.

செப்டம்பர் 15ஆம் தேதியின் பங்குச் சந்தை நிலவரத்தை அடிப்படையாக கொண்டு இந்த
பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
100 செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தை முகேஷ் அம்பானி பிடிக்க, இரண்டாவது
இடத்தில் குமார் பிர்லாவும், மூன்றாவது இடத்தில் அஷோக் லேலண்டின் ஹிந்துஜா
பந்து, நான்காவது இடத்தில் வோர்ஸெலர் மித்தலின் லஷ்மி மித்தல் மற்றும் ஐந்தாவது
இடத்தில் ஷாபூர்ஜி பெல்லஞ்சி குழுமத்தின் பெல்லஞ்சி மிஷ்த்ரியும் இடம்பெற்றுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *