இந்தியா நியூசிலாந்து நாளை மோதல்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நாளை  ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மோதுகின்றன. இந்த இரு அணிகளும், இதுவரை ஆடிய போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. உலகக் கோப்பையில் இரு அணிகளும் பல முறை சந்தித்துள்ளன. இரு அணிகளும் மோதவிருக்கும் நிலையில், அணியில் இருக்கும் முக்கிய வீரர்கள் தங்களுடைய பணியை சிறப்பாக செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு ஆடவுள்ளன.

உலகக் கோப்பை மோதல்:

இந்தியா vs நியூசிலாந்து

மொத்த ஆட்டங்கள்: 7
இந்தியா வெற்றி: 3
நியூசிலாந்து வெற்றி: 4
டை: 0
முடிவில்லை: 0

நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் ஒரு போட்டியும், இங்கிலாந்தில் மூன்று போட்டிகளும் வென்றுள்ளது. அதேபோல் இந்தியா சொந்த மண்ணில் இரண்டு போட்டிகளும், தென்னாப்பிரிக்காவில் ஒரு போட்டியும் வென்றுள்ளது. இந்த இரு அணிகளும் கடைசியாக 2003ம் ஆண்டு சந்தித்தன. ஆனால், இப்போது 16 வருடங்களுக்கு முன்பு இருந்த அணி வீரர்கள் மாறியுள்ளனர். எனவே, ஆட்டம் சுவாரஸ்மானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *