இந்தியா அபார வெற்றி…

கிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம்.

தமிழ்நேரலை

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் துபாயில் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ரஸ் அஹமது பேட்டிங் செய்வதாக அறிவித்தார். பேட்டிங்ஐ துவங்கிய சிறிது நேரத்திலேயே பாகிஸ்தான் அணி வீரர்கள் இமாம் உள் ஹாக் தோனிடமும் ,பேக்கர் ஜாமன் சாகலிடமும் கேட்ச் கொடுத்து புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் வெளியேறினர். அதன் பின் இணைந்த பாபர் அசாம், மாலிக் ஜோடி சிறப்பாக இந்திய பந்து வீச்சை எதிர்கொண்டது. பாபர் அசாம் 47 ரன்களில் குல்தீப்ன் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினர். ராயுடுவின் சிறப்பான த்ரோவில் மாலிக் ரன் அவுட் ஆகி 43 ரன்களில் வெளியேறினார். கேதர் ஜாதவ்ன் பந்து வீச்சில் பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிக்கொடுத்தனர்.44 வது ஓவரில் 162 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி வீரர்கள் புவனேஷ்வர்குமார், ஜாதவ் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றினர்.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ரோஹித் தவான் ஜோடி அதிரடியாக விளையாடியது. புல் ஷாட்டில் இரண்டு அட்டகாசமான சிக்ஸர்களை பறக்க விட்ட ரோஹித் சர்மா பாகிஸ்தான் பவுலர்களை மிரள வைத்தார்.6 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் அரைசதம் கண்ட ரோஹித் 52 ரன்களில் ஷானப்கான் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். தவான் 46 ரன்களில் 6 பவுண்டரி 1 சிக்ஸர் உடன் அஷ்ரஃப் பந்தில் பாபர் அசாமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பின் இணைந்த ராயுடு, தினேஷ் கார்த்திக் ஜோடி நேர்த்தியாக விளையாடியது. இந்திய அணி 29 வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராய்டு மற்றும் தினேஷ் கார்த்திக் தலா 31 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நின்றனர்.
சிறப்பாக பந்து வீசிய இந்திய வீரர் புவனேஷ்வர் குமார் ஆட்ட நாயகனாக அறிவிக்கபட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *