
இந்தியா அபாரம் !
இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. கவுகாத்தியில் கடந்த 5ம் தேதி நடைபெற இருந்த முதல் போட்டி மழை காரணமாக களம் ஈரமாக இருந்ததால் ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இந்த நிலையில், 2வது டி20 போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர், ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது.
டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவு செய்தார்.இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன் குவித்தது. ஹசரங்கா 16 ரன் (10 பந்து, 3 பவுண்டரி), லாகிரு குமாரா (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய பந்துவீச்சில் ஷர்துல் தாகூர் 3, குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி தலா 2, சுந்தர், பூம்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இந்திய அணி 20 ஓவரில் 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியதுஇந்திய அணி 17.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது.
விராத் கோஹ்லி 30 ரன், ரிஷப் பண்ட் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டி20 போட்டி புனேவில் நாளை மறுநாள் நடைபெறுகிறது.