கிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம்
தமிழ்நேரலை
ராஜ்கோட்டில் இன்று நடைபெறும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. தற்போதுள்ள அந்த அணி வீரர்களில் 5 பேர் மட்டுமே இந்தியாவில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள். கேப்டன் ஹோல்டர்க்கே இதுதான் முதல் இந்திய டெஸ்ட் தொடர் ஆகும்.2012 ஆம் ஆண்டிற்கு பிறகு அந்த அணி பெரிய அணிகளுக்கு எதிராக எந்த டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை கைபற்றி உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சில் ஜெடேஜா, குல்தீப், அஸ்வின் மற்றும் வேகபந்து வீச்சில் உமேஷ், சமி உள்ளனர். பேட்டிங்கில் கோலி, புஜாரா, ராகுல், ரிஷப் பண்ட் நல்ல நிலையில் உள்ளனர்.18 வயதான பிரித்வி ஷா இன்று தன் அறிமுக போட்டில் பங்கிற்கிறார்.
சொந்த மண்ணில் வலுவான இந்திய அணியை அனுபவம் இல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணி சமாளிக்குமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். காலை 9.30 மணிக்கு துவங்கும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.