இந்தியாவை எப்படி பார்க்கிறார்கள்?

கொரோனாவிற்கு பிறகு உலக நாடுகள் இந்தியாவை  எவ்வாறு பார்க்கின்றன என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.  2020-ல் இந்தியாவை பார்த்து பெருமைப்பட்டவர்கள் இன்று நம்மளை கண்டாலே தள்ளி நிற்கிறார்கள்,  இல்லை இல்லை கதவை மூடி விட்டார்கள்.  இதுதான் இன்றைய நமது நிலைமை கொரோனா ஆரம்பித்த காலத்தில் இந்தியாவில் ஒரு கொரோனா இல்லை.  உலக தொழில் அதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தயாராக இருந்தார்கள்.  ஆனால் தற்போதைய நிலை என்ன?   முதலீடு வேண்டாம், என் வீட்டிற்கு வராதே என்று கதவை சாத்திவிட்டார்கள்.   காரணம் நீங்கள் கொடிய வைரஸ் நோயாளிகள் என்று அவர்கள் அந்நாட்டு மக்களுக்காக அந்த முடிவு எடுக்கிறார்கள்.  இதே முடிவை 2020-ல் நமது பிரதமர் எடுத்திருப்பார் எனில்,  நாம் எல்லாம் நோயற்று  நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருப்போம் அல்லவா.  ஆனால் அன்று அத்தகைய முடிவு எடுக்க தவறியதால், வெளிநாடுகளிலிருந்து  இறக்குமதியான கொரோனா  நம்மளை ஆட்டுவிக்கிறது.

               வெளிநாட்டினர் எப்பொழுதும் சுயநலவாதிகள் தமது மகிழ்ச்சிக்காக எதையும் செய்ய தயங்கமாட்டார்கள்.    கொரோனா மருத்துவச் சான்று வாங்கித்தான் அவர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கிறார்கள்.  அதன் பிறகு 14, 21 நாட்கள் தனிமை படுத்துகிறார்கள்,  அதன் பிறகுதான் அவர்கள் நம்மளை அனுமதிக்கிறார்கள்,  அப்புறம் எதற்கு  இந்த வெற்றுத்தடை  எல்லாம்,  ஆண்டவனுக்கே புரியும்.  உலக நாடுகள் பல  நம்மளை தடை செய்துள்ளது.   கொரோனா காலத்திலும்  நாம் அவர்களை  வரவேற்றோம்.  இதுதான் இந்தியாவுக்கும்  உலக நாடுகளுக்கும்  உள்ள வித்யாசம்.   நாம் நாட்டில் உள்ள மக்கள் எல்லோரையும் கொரோனவாக பார்ப்பது எந்த விதத்தில் நியாயம். நாமும் அவர்களை  பார்த்திருந்தால் அன்று என்ன ஆகியிருக்கும்.  குப்பைகள் ஒன்று சேர்ந்தால் குப்பை மேடாக மட்டும்தான் ஆகமுடியும் என்பது தற்பொழுது உண்மையாகிறது.

                  இந்தியர்கள் வேலைக்கு வேண்டும் அதுவும் திறமையான, இளமையான வேலை செய்யும்,  வேலையைவிட தகுதியான,  வாய்த்திருந்தது பேசாத இந்தியர்கள் வேண்டும்.   நிர்ணயித்த சம்பளத்தைவிட  பலமடங்கு குறைவாக பெற்று கொள்கிற இந்தியர்கள் வேண்டும்  என்று நினைக்கும் வெளிநாடுகளுக்கு இந்தியர்கள் இல்லாவிட்டால் அவர்கள் நிலைமை என்ன ஆகும்.  புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.   அவர்களால் நாம் பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வுகள் கூட அவர்களுக்கு இல்லை.

                இந்தியாவின் கையுறை வேண்டும்,  முகமூடி வேண்டும்,   ஆக்சிஜன் வேண்டும்,  வெண்டிலேட்டர் வேண்டும்,  தடுப்பூசி வேண்டும்.  ஆனால் இந்தியர்கள் அனுமதி இல்லை  என்ற வெட்கக்கேடு மூன்றாம் தர அரசியல்வாதிகள் இந்தியாவை ஆளும் வரை இந்த நிலைமை தொடரத்தான் செய்யும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *