கிரிக்கெட் விமர்சகர், பொறியாளர் S.வீரசெல்வம்.
தமிழ்நேரலை.
மார்ச் மாதம் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னர்க்கு ஒரு ஆண்டுக்குச் சர்வதேச போட்டிகளில் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. இந்நிலையில் தடையை நீக்க வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதனை முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைவர் டேவில் பீவெர் நிராகரித்தார். அவர் தன் பதவியை ராஜினாமா செய்து உள்ள நிலையில் தற்காலிக தலைவர் எர்ல் எட்டிங்ஸ் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்று இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்க்கான ஆஸ்திரேலிய அணி தேர்வுவில் இறுதி முடிவு எடுக்கப்படும். என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் கூறி உள்ளார்.