அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யபடும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கபடுவதால் அமெரிக்காவுக்கு அதிக பொருளாதார இழப்பு ஏற்படுகிறது எனவும், அதனால் சிறப்பு வர்த்தக நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவிற்கு ரத்து செய்வதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் நாடு என்ற அந்தஸ்தையும் ரத்து செய்வோம் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
