இந்தியாவில் அமெரிக்கா 6 அணுஉலைகளை ஏற்படுத்தித் தருவதற்கு, இரு நாடுகளிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே அந்நாட்டு வெளியுறவுத்துறை உயரதிகாரி ஆண்ட்ரியா தாம்ப்சன் உடன் பேச்சு நடத்தினார். 2 நாட்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அமெரிக்கா 6 அணுஉலைகளை இந்தியாவில் ஏற்படுத்தித் தருவதற்கான உடன்பாடு எற்படுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், 6 அமெரிக்க அணுஉலைகளை இந்தியாவில் ஏற்படுத்துவது உள்ளிட்டு, பாதுகாப்பு மற்றும் அணுசக்தித் துறையில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அணுஉலைகளை ஏற்படுத்துவது தொடர்பாக வேறு எந்த விவரங்களும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.