இந்தியாவின் கட்டுப்பாட்டில் நியூசிலாந்து

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் ஒரு நாள் தொடரின் முதல் போட்டி நேபியரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சில் நியூசிலாந்து வீரர்கள் தொடக்கம் முதலே தடுமாறினர். துவக்க வீரர்கள் முன்ரோ மற்றும் குப்தில் முஹமது ஷமி பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினர். ரோஸ் டெய்லர் சாகல் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இருந்தபோதிலும் மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் வில்லியம்சன் அரைசதம் அடித்து 64 ரன்களில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

அதன் பின் களம் இறங்கிய நியூசிலாந்து வீரர்கள் யாரும் குறிப்பிடத்தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. நியூசிலாந்து அணி 38 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 157 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 39 ரன்கள் விட்டுகொடுத்து 4 விக்கெட்களை கைபற்றினார். இந்திய வீரர்கள் ஷமி மூன்று விக்கெட்களையும், சாகள் இரண்டு விக்கெட்களையும், கேதார் ஜாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *