பிரிட்டன் நாட்டின் உள்துறை செயலர் சாஜித் ஜாவித் விஜய் மல்லையாவை இந்தியா வசம் ஒப்படைக்க உத்தரவு இட்டு இருந்தார். நிதி மோசடி, வங்கி கடன் மோசடி வழக்குகளில் விஜய் மல்லையா மீது இந்தியாவில் புகார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் வங்கிகளில் ஒன்பது ஆயிரம் கோடி ரூபாய் வரை விஜய் மல்லையா கடன் வாங்கி செலுத்தாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய 14 நாட்கள் அவகாசம் இருந்த நிலையில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக விஜய் மல்லையா நேற்று டிவிட்டரில் கூறியுள்ளார்.