FedEx என அன்பாக அமெரிக்க மக்களால் அழைக்கப்படும் நம்பிக்கையான நிறுவனத்துக்கு ஒரு இந்தியர் தலைமை அதிகாரியாக வருகிற 2019 ஜனவரி 1-ல் பதவியேற்கிறார். அவரது பெயர் ராஜேஷ் சுப்பிரமணியன் அவரை இந்தியர் என அழைப்பதில்தான் பெருமை ஏனென்றால் இது வெளிநாட்டு உயர்வு. FedEx மற்றும் அதன் தலைமை செயல் அதிகாரி பற்றிய கட்டுரை.
FedEx இவர்களது வேலைத்திறமை மிக துல்லியமானது. இவர்கள் குறிப்பிட்ட இலக்கை அடைவதில் அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் தனது வாடிக்கையாளர்களை விருப்பத்தை நிறைவேற்றக் கூடியவர்கள்.
இவர்களது தாரகமந்திரம் மூன்று தங்களால் நிறைய (எல்லா பொருட்களையும்) டெலிவரி செய்ய இயலும், அதிக வாடிக்கையாளர்களை இணைத்தால், வாடிக்கையாளர்கள் உறுதியளித்தல்.
ஒரு நாடு இரு நாடு அல்ல இவர்களது சேவை 220 நாடுகளுக்கு கடந்து செல்கிறது. உலகத்தில் 99 சதவீதம் இவர்களது ஆதிக்கம் தான். உறுதியான வாடிக்கையாளர்கள், ஏறக்குறைய 4,25,000 ஊழியர்களின் சுயநலமில்லா உழைப்பு இது தான் FedEx.1971-ல் ஆரம்பிக்கப்பட்ட FedEx கடந்த 47 வருடங்களில் எண்ணிலடங்கா சாதனைகளை படைத்துள்ளது.
இவர்களது ஆதிக்கம் விரைவாக பொருள்களை சேர்த்தல், விரைவு மெயில், லாஜிஸ்டிக்ஸ் போன்றவற்றில் இவர்கள் ஜாம்பவான்களாக உள்ளனர். இவர்களது வர்த்தகம் அமெரிக்க டாலரில் ஏறக்குறைய U$65.450 பில்லியன் ஆகும். நிகர வருமானம் U$4.572 பில்லியன் ஆகும். மொத்த சொத்து மதிப்பு U$52.330 பில்லியன் ஆகும்.இதன் தலைவராக இந்தியர் பொறுப்பு ஏற்பதில் பெருமை. அவர் எவ்வாறு இந்த இடத்தை அடைந்தார் பலருக்கு வியப்பு.
கல்வி தகுதி:
இவர் 1987 ஆம் ஆண்டு கெமிக்கல் இன்ஜினியரிங் B.tech மும்பை IIT இல் பொறியியலாளராகப் பட்டம் பெற்றார். பின்னர் மாஸ்டர் ஆஃப் சயன்ஸ் இன் கெமிக்கல் syracuse பல்கலைக்கழகத்திலும், MBA Texas in austin பல்கலைக்கழகத்திலும் முடித்தார்.
FedEx-ல் அவர் கடந்துவந்த பாதை:
FedEx corp குழுமத்தில் 1991 ஆண்டு ராஜேஷ் சுப்ரமணியம் இணைந்தார். அன்று முதல் 27 ஆண்டுகளாக பல்வேறு நிலைகளில் பணியாற்றி தனது திறமையால் பல உயர் படி நிலைகளை fedex corp இல் ராஜேஷ் சுப்ரமணியம் அடைந்தார். அவரது தலைமைத்துவ திறைமைகளின் காரணமாக ஹாங்காங்கிற்கு சென்றார். அன்று முதல் ஆசியாவை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
அதன் பின் கனடாவில் fedex corp இன் முதன்மை அதிகாரியாக பணியாற்றினார்.பிறகு அமெரிக்கா வந்த அவர் 2013 ஆண்டு executive vice president பதவியை அடைந்தார். அதன் பின் 2017 ஆம் ஆண்டு முதல் executive vice president மற்றும் chief marketing communication officer ஆகிய பதவிகளையும் வகித்து வருகிறார்.
பெற்ற சர்வதேச விருதுகள்:
ராஜேஷ் சுப்ரமணியம் அவர்கள் கனடா பிரதமரிடம் 2006 ஆம் ஆண்டு president award வாங்கினார்.EXCEL award ஐ international association of business communication வழங்கியது. மேலும் நான்கு முறை fedex five star award ஐயும் வாங்கி உள்ளார்.
India business council, american heart association, fogelman centre of business and economics at the university of memphis ஆகியவையும் இவருக்கு விருதுகள் வழங்கி உள்ளன.
அவரது தாரக மந்திரம்:
“நீங்கள் வழிநடத்தும் அமைப்புக்கு ஒரு தெளிவான பார்வையை உருவாக்கவும், பார்வைக்கு நம்பிக்கை கொண்ட குழுவினரில் சரியான நபர்கள் இருப்பதை உறுதிப்படுத்தவும், நிறைவேற்றவும் முடியும்.
ராஜேஷ் சுப்ரமணியம் அவர்களின் வணிக நுண்ணறிவு fedex corp ஐ பல்வேறு படிநிலைகளுக்கு கொண்டு சென்றது.fedex corp இன் பல்வேறு முன்னேறங்களுக்கு இவரே பொறுப்பு ஆவார். இவரின் திறமையால் fedex ஒரு நம்ப முடியாத நிலையை இன்று அடைந்து உள்ளது.தமிழ்நேரலை சார்பில் வாழ்த்துகள்.