இது ஒரு இந்திய கிரிக்கெட் ரசிகனின் மனக்குமுறல்

ஏதாவது தொடரை எற்பாடு செய்து அதன் மூலம் வருமானத்தை ஈட்டு வதை விட்டு விட்டு உருப்படியாக ஏதாவது செய்யலாமே.

சரியான திட்டமிடுதல் இல்லை எதற்காக தொடர்ந்து ஓய்வு இல்லாமல் விளையாடிக் கொண்டே இருக்கவேண்டும். அதனால் பெரிய தொடர்களில் நமது அணியின் வெற்றியின் விகிதம் உயர்ந்து விட்டதா என்றால் அதற்குப் பதில் இல்லை.

இப்பொழுது ஏன் தோல்வி என்று கேட்டால் பழைய அணிகளை விட இது சிறந்த அணி என்று சொல்வதா அப்படியே எடுத்துக் கொண்டாலும் நீங்கள் பழைய சம்பளத்தை ஏற்க தயாரா?

பழைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த தயாரா?
பழைய கட்டமைப்புகளை பயன்படுத்தத் தயாரா?
பழைய விதிமுறைகளைப் பயன்படுத்த தயாரா?
பழைய ஆடுகளங்களைப் பயன்படுத்த தயாரா?
பழைய விளம்பர ஒப்பத்தந்தை ஓத்துக்கொள்ளத் தயாரா?

பழைய பயிற்ச்சியாளரின் சம்பளம்தான் உங்களுக்கு என்றால் நீங்கள் எங்கே ஓடுவீர்கள் என எங்களுக்குத் தெரியும்.

பல வீரர்கள் விளையாடுகிறார்கள் ஆனால் ஒரு சிலர் மட்டுமே விளம்பரம் மூலம் சம்பாதிக்கிறார்கள். ஏன் அவர்களுக்கு மட்டும் குடை பிடிக்கிறீர்கள்.
அவர்களை விட விளையாட்டில் சிறந்த வீரர்களை கண்டுகொள்வதே இல்லை ஏன் இந்த மாற்றுப் மனப்பாண்மை.

தற்பொழுது இந்திய அணியின் கேப்டன் தனது மனைவியும் வெளி நாட்டுப் பயணங்களில் இடம் பெற வேண்டும் என்று கேட்டு உள்ளார்.
உலகத்தில் வேலைக்குச் செல்பவர்கள் எனது மனைவியும் கூட வரவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பமுடியுமா?

அவ்வளவு சொகுசு வாழ்க்கை பழகி பழாகிவிட்டது உங்களுக்கு.
தயவு  செய்து கிரிக்கெட்டை விட்டு விட்டு தேனிலவு செல்லுங்கள்.

இந்தியாவுக்கும் மேற்குஇந்திய தீவுக்கும் இடையிலான போட்டிகளில் ரசிகர்களின் ஆர்வம் மிகவும் குறைந்து உள்ளது.

என்ன செய்வது என்று தெரியாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது.
தேவையில்லா தொடரில் வெஸ்ட்இண்டிஸ் தனது நட்சத்திர வீரர்களை விட்டுவிட்டு வந்து ஏதோ ஒரு விளையாட்டை ஆடிக் கொண்டு உள்ளது.

மைதனாங்களில் ரசிகர்கள் வருகை மிகக் குறைவாக உள்ளது. அதைப் பூர்த்தி செய்வதற்காக டிக்கெட் விலைகளை அதிரடியாகக் குறைத்து உள்ளது.
டிக்கெட்டுகள் விலைகுறைப்பில் நடந்த அரசியலில் மைதானத்தை மாற்றும் அளவுக்குச் சென்று உள்ளது.

ஏன் எதற்க்காக இந்தத் தொடரை ஏற்பாடு செய்தார்கள் என்பதற்குச் சரியான புரிதல் கூட இல்லாத கிரிக்கெட் நிர்வாகிகள் அமைந்த வெற்று கூடாரமாகி விட்டது இந்திய கிரிக்கெட் வாரியம்.இப்பொழுது வெஸ்ட்இண்டிஸ் அணியை அழைக்க வேண்டிய அவசியம் என்ன அப்படியே வந்தாலும், நல்ல அணியை அனுப்ப நிர்பந்திருத்தால் என்ன? எதுவும் சரியாக நடக்காது, நடக்கக்கூடாது விளம்பர பணம் மட்டும் வேனும் என்பதைத் தான் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல் காட்டுகிறது.

பேச்சைக் குறைத்து செயலைக் காட்ட உங்களுக்கு தெரியாது  இதற்கு அனைத்துக்கும் சொகுசுபோர்டே(கிரிக்கெட்போர்டே) காரணம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *