மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் 2019-20 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் வருமானவரி விலக்கு உள்ளிட்ட ஒரு சிலவற்றைத் தவிர வாக்குகளை வாங்குவதற்காக வார்த்தை ஜாலங்கள் நிறைந்த, காகிதப் பூமாலையாக மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அமைந்துள்ளது என தெரிவித்து உள்ளார்.
