இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரை யாருக்கு என தீர்மானிக்கும் மூன்றாவது ஒரு நாள் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய வீரர் புவனேஷ் குமாரின் சிறப்பான பந்து வீச்சில் அலெக்ஸ் ஹேரி 5 ரன்களிலும், ஆரோன் பின்ச் 14 ரன்களிலும் வெளியேறினர்.
தற்போது ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஷேன் மார்ஷ் 19 ரன்களிலும், கவாஜா 24 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.